என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிகேஎஸ் இளங்கோவன்"
- அ.தி.மு.க. கூட்டணி 23.05 சதவீதமும், பா.ஜ.க. கூட்டணி 18.28 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 8.10 சதவீத வாக்குகளும் பெற்று இருக்கின்றன.
- தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எந்த இடமும் இல்லை.
சென்னை:
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 4 கோடியே 36 லட்சத்து 19 ஆயிரத்து 470 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதில் தி.மு.க. கூட்டணி 2 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரத்து 693 வாக்குகள் பெற்றன. அது 46.97 சதவீதம் ஆகும். அ.தி.மு.க. கூட்டணி 23.05 சதவீதமும், பா.ஜ.க. கூட்டணி 18.28 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 8.10 சதவீத வாக்குகளும் பெற்று இருக்கின்றன.
இதுதவிர சுயேச்சைகள் மற்றும் இதர கட்சியினர் 2.66 சதவீத வாக்குகளும், நோட்டா 1.07 சதவீத வாக்குகளும் பெற்று உள்ளன.
ஒவ்வொரு கட்சி ரீதியாக பார்த்தால் 4 கட்சிகள் மட்டும் 10 சதவீத வாக்குகளை தாண்டி இருக்கின்றன. தி.மு.க.- 26.9, அ.தி.மு.க.- 20.46, பா.ஜ.க.- 11.24, காங்கிரஸ் - 10.67 சதவீத வாக்குகள் பெற்று இருக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுவது குறித்து தி.மு.க. மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், தமிழகத்தில் பா.ஜ.க.வால் வளர முடியாது. பா.ம.க. மற்றும் அதன் மற்ற கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சில வாக்குகளை பெற்றிருக்கலாம். அவர்களுக்கு என தனிப்பட்ட ஆதரவு இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எந்த இடமும் இல்லை. அவர்கள் பெற்ற வாக்குகள் அனைத்தும் கூட்டணி கட்சிகளால்தான் என்று கூறியுள்ளார்.
- தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் கவர்னர் ஆர்.என்.ரவி தனது நிலைப்பாட்டை மாற்றினார்.
- கடைசியில் ஒட்டு மொத்த மக்களின் எதிர்ப்பால் கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான விளக்கம் அளித்து விட்டார்.
சென்னை:
தமிழக கவர்னர். ஆர்.என். ரவிக்கும், தி.மு.க. அரசுக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தது.
இதன் உச்சககட்டமாக தமிழ்நாடு என்று சொல்வதற்கு பதில் தமிழகம் என்ற வார்த்தையை கவர்னர் பயன்படுத்த தொடங்கினார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் கவர்னர் ஆர்.என்.ரவி தனது நிலைப்பாட்டை மாற்றினார்.
எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று கூறி இருந்தார்.
எனது பேச்சின் அடிப்படை புரியாமல் கவர்னர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாத பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என்றும் கவர்னர் தெளிவுப்படுத்தி இருந்தார்.
இது பற்றி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
கவர்னர் ஆர்.என்.ரவி தமிழை பற்றி உள்ளார்ந்தமாக புரிந்து கொள்ளாமல் யாரோ எழுதி கொடுப்பதை பொது வெளியில் சொல்கிறார். திருக்குறளை தப்பாக மொழி பெயர்த்தனர் என்று ஆரம்பத்தில் பேசி வந்தார்.
திராவிடம் என்ற வார்த்தை ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த வார்த்தை என்ற அர்த்தத்தில் பேசினார். ஆனால் அதற்கு முன்பே திராவிடம் இருக்கிறது. திராவிடம் என்ற வார்த்தைைய சங்கராச்சாரி யாரே சொல்லி உள்ளார்.
தி.மு.க.வை பிரிவினைவாத கட்சி மாதிரி சித்தரிக்க கவர்னர் நினைத்தார். ஆனால் அது எடுபடவில்லை. இப்போது நாங்கள் தனிநாடு கோரவில்லை. 1964-ம் ஆண்டே அதை தெளிவுப்படுத்திவிட்டோம்.
தமிழ்நாடு என்று நாம் சொல்வதால் தனிநாட்டுக்காக போராடும் சக்தியாக தி.மு.க.வை தவறாக சித்தரிக்கலாம் என்ற எண்ணத்தில் தமிழகம் என்ற வார்த்தை தான் பொருத்தமானது என்று கவர்னர் பேசி இருந்தார்.
ஆனால் அவர் நினைத்தது வேறு. நடந்தது வேறு. கடைசியில் ஒட்டு மொத்த மக்களின் எதிர்ப்பால் கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான விளக்கம் அளித்து விட்டார்.
டெல்லி மேலிடம் சொன்னதின் பேரிலேயே அவர் அந்த விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
- தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் உடல்நலிவு காரணமாக கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.
- சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகலுக்கு புதிதாக நாங்கள் எந்த காரணமும் கூற முடியாது.
சென்னை:
தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் உடல்நலிவு காரணமாக கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால் இதே பொறுப்பு வகித்த வி.பி.துரைசாமி அரசியல் ரீதியாக தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். அது வேறு. இது வேறு. இரண்டையும் ஒப்பிடக்கூடாது. சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகினாலும் தி.மு.க. உணர்வுடன்தான் இருக்கிறார். அவர் பா.ஜ.க.வில் இணைகிறேன் என்று சொல்லவில்லை. சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகலுக்கு புதிதாக நாங்கள் எந்த காரணமும் கூற முடியாது.
ஆனாலும் அவரது கணவர் ஜெகதீசன் சமூக வலைதளங்களில் தி.மு.க.வை பற்றி விமர்சித்து வருகிறார். அவரது பதிவுகளை நீக்கக்கோரி எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருக்கிறோம். அவர் தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை. நாங்கள் வேறு என்ன செய்ய முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க.வின் செய்தி தொடர்புச் செயலாளராக இருந்தவர் டி.கே.எஸ். இளங்கோவன்.
அவரை நேற்று அந்த பதவியில் இருந்து நீக்கி, தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டார். அதில் டி.கே.எஸ். இளங்கோவன் பதவி நீக்கத்துக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் டி.கே.எஸ். இளங்கோவனின் பேச்சுக்களால்தான் அவர் மீது மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மு.க.அழகிரி பற்றி யாரும் பேசக் கூடாது என்று மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அதை மீறி மதுரையில் நடந்த கூட்டம் ஒன்றில் மு.க.அழகிரி குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் பேசினார். இது மு.க.ஸ்டாலினிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
சில தினங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் தேர்தல் ஒத்திவைப்பு குறித்து மு.க.ஸ்டாலின் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் மறுநாள் அதற்கு எதிர்மாறான கருத்தை டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். இதுவும் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே நேற்று பேட்டியளித்த டி.கே.எஸ். இளங்கோவன், ‘‘அறிவாலயத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக சோனியா வர இருக்கிறார்’’ என்ற தகவலை வெளியிட்டார். சிலை திறப்பு விழாவுக்கு டெல்லியில் உள்ள தலைவர்களை அவரே அழைத்து வருவது போன்றும் அவரது பேட்டி அமைந்திருந்தது.
இதைத்தொடர்ந்து டி.கே.எஸ். இளங்கோவனின் பதவியை தி.மு.க. தலைமை பறித்து நடவடிக்கை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.
தி.மு.க. செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து இளங்கோவன் நீக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு அவர் பேட்டி அளித்த போது 2016 தேர்தலில் தி.மு.க. எத்தனை இடத்தில் போட்டியிடும் என்பது பற்றி சில தகவல்களை வெளியிட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த கருணாநிதி உடனடியாக அவரை செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கினார். உடனே டி.கே.எஸ். இளங்கோவன் மன்னிப்பு கோரி கடிதம் அளித்தார்.
அதை ஏற்று அவருக்கு மீண்டும் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் கருணாநிதி சிலை திறப்பு விழா, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி விவரங்களில் அவர் அளித்த தகவல்கள் அதிருப்தியை ஏற்படுத்தியதால் மீண்டும் பதவி பறிபோக காரணமாகி விட்டது. #DMK #TKSElangovan #MKStalin #Karunanidhi
திமுக செய்தித்தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த டி.கே.எஸ்.இளங்கோவன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திமுக சார்பாக ஊடக நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் என க.பொன்முடி, ஆர்.எஸ் பாரதி, செல்வகணபதி, ஆ.ராசா, ஜெ. அன்பழகன், பழ.கருப்பையா மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட 7 பேர் அடங்கிய பட்டியலை அக்கட்சியின் தலைமை கழகம் இன்று வெளியிட்டது.
"கழகத்தின் சார்பில் ஊடக நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் விவரம்”
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) October 15, 2018
-தலைமைக் கழகம். @Kalaignarnews@sunnewstamil@polimernews@PTTVOnlineNews@News18TamilNadu@news7tamil@ThanthiTV@vikatan@nakkheeranweb@sathiyamnews@maalaimalar@MadhimugamTV@cauverytv@RajtvNetworkpic.twitter.com/J7kj2RrG27
இந்நிலையில், திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் பொருப்பில் இருந்து மாநிலங்களவை உறுப்பினரும், திமுக அமைப்பு செயலாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பில் வேறு ஒருவர் உடனடியாக நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #TKSElangovan #DMK
இக்கூட்டம் முடிந்ததும் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க மட்டுமே இன்றைய செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டதாக கூறினார். மேலும், காலம் வரும்போது பொதுக்குழு கூடி திமுக தலைவரை தேர்வு செய்யும் என்றும் தெரிவித்தார்.
திமுகவை உடைக்க யாருக்கும் வலிமை கிடையாது என்றும், அடுத்தவர்களின் சதிக்கும் திமுகவினர் உடன்பட மாட்டார்கள் என்றும் இளங்கோவன் கூறினார். #DMKExecutiveCommittee #TKSElangovan
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி நாட்டில் தி.மு.க தொண்டர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று இரவு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரவிவரும் வதந்திகளால் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்திலும், கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையிலும் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து பேசிய டி.கே.எஸ் இளங்கோவன், கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராகி விட்டதாகவும், இருப்பினும் இரண்டு நாட்கள் மருத்துவமனையிலேயே மருத்துவர்களின் கண்காணிப்பில் கருணாநிதி இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார். #DMK #Karunanidhi #KauveryHospital #TKSElangovan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்